பாரத ஸ்டேட் வங்கி (SBI) நுகர்வோருக்கு அளிக்கும் நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களை (MCLR) கடந்த மாதம் 15ஆம் தேதி அதிகரித்த நிலையில், மீண்டும் 5-10 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து SBI அளித்த MCLR உடன் இணைக்கப்பட்ட வீடு, தனிநபர் கடன்களுக்கான வட்டி உயருகிறது. இது, அக்கடன்களை திருப்பிச் செலுத்தும் தவணைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும்