T20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 2 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார். ஜூன் 20ஆம் தேதி வங்கதேசம் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய அவர், இன்று ஆஃப்கன் அணிக்கு எதிரான போட்டியிலும் தனது 2ஆவது ஹாட்ரிக்கை பதிவு செய்தார். இதன்மூலம், உலக கோப்பை தொடரில் அடுத்தடுத்த 2 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
2024 டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி ஆஃப்கன் அணி அபார வெற்றி பெற்றது. கிங்டவுனில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 148/6 ரன்கள் எடுத்தது. பின்னர் 149 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.