2024 டி20 உலக கோப்பை பைனலில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பார்படாஸ் மைதானத்தில் மோத உள்ள நிலையில், நாளை அங்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. டாஸ்க்கு முன் மழை நிற்காவிட்டால் கூடுதலாக 190 நிமிடங்கள் ஒதுக்கப்படும். நாள் முழுவதும் மழை பெய்தால் மறுநாள் (ரிசர்வ் டே) போட்டி நடைபெறும். மறுநாளும் மழை பெய்தால் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.