இலங்கை T20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார். இது தொடர்பாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அணியின் நலனுக்காக ஹசரங்கா தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு T20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி, அடுத்தடுத்து தோல்விகளையே தழுவியது குறிப்பிடத்தக்கது.