நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 11 பேர் கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் ஷர்மா, ரஹ்மனுல்லா குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல், ரஷீத் கான், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12வது வீரராக அன்ரிச் நோர்ட்ஜே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் முதல் 11 பேரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் இல்லாதது குறிப்பிடத்தக்கது.