பரபரப்பான 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதனையடுத்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் அறிவித்துள்ளது இந்திய அணியில் மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அவர்களின் இடங்களை அடுத்து யார் நிரப்புவார்கள் என்ற மிகப்பெரும் கேள்வி எழுந்துள்ளது. இளம் வீரர்களான சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், சாம்சன், வெங்கடேஷ் அய்யர் ஆகியோரில் யாரேனும் 2 பேருக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.