நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான TCS, நடப்பு ஆண்டில் 40,000 பேரை புதிதாக பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பு முடித்த பிரஸ்சர்ஸாக இருப்பார்கள் என தெரிகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் இந்நிறுவனம் 5,452 ஊழியர்களை புதிதாக பணியில் அமர்த்தியுள்ளது. இதன் மூலம் TCS இன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 6,06,998 ஆக உயர்ந்துள்ளது.