டி20 உலக கோப்பையின் லீக் ஆட்டங்கள் கிட்டதட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக சூப்பர் 8 சுற்று நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வரும் 20ம் தேதி பார்படாஸில் எதிர்கொள்ள உள்ளது. இதற்காக பார்படாஸ் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் அங்குள்ள புகழ்பெற்ற கடற்கரையில் சிறிது நேரம் வாலிபால் விளையாடினர். இந்திய அணியினர் வாலிபால் ஆடிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.