குரூப்-1 மற்றும் ஒருங்கிணைந்த குரூப்-1 பி, சி முதல்நிலைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உதவி ஆட்சியர், அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான இந்த தேர்வை, 1.60 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இந்நிலையில், உத்தேச விடைகளில் ஆட்சேபனை இருந்தால், ஜூலை 30க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க TNPSC அறிவுறுத்தியுள்ளது.