கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் மேத்யூ திருவனந்தபுரத்தில் கடந்த 1965 ஆம் ஆண்டில் மருத்துவம் படித்துவிட்டு UAE- க்கு 1967 ஆம் ஆண்டு சென்றார். அங்கு அந்த நாட்டின் சுகாதாரத் துறையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். இவருடைய பங்களிப்பு UAE சுகாதாரத்துறை நவீனமடைய காரணமாக அமைந்தது. இதனால் அவரை கௌரவிக்கும் வகையில் அபுதாபியில் உள்ள சாலை ஒன்றுக்கு “ஜார்ஜ் மேத்யூ தெரு” என பெயரிடப்பட்டுள்ளது.