ஐஐடி குழுவால் உருவாக்கப்பட்டுள்ள PadhAI என்ற செயலி நடந்து முடிந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஏழு நிமிடத்தில் எழுதி அனைவரையும் அசர வைத்துள்ளது. AI அடிப்படையில் செயல்படும் இந்த செயலி யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி சிவில் சர்வீஸ் தேர்வு தாளுக்கு பதிலளித்து 200 க்கு 170 மதிப்பெண் பெற்றுள்ளது. இது தேசிய அளவில் முதல் 10 இடங்களை பெறும் மதிப்பெண் ஆகும்.