யுபிஎஸ்சி முதன்மை தேர்வு – 2024க்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற முதன்மை தேர்வுக்கான முடிவுகள் யுபிஎஸ்சி இணையதள முகவரியில் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களது பெயர், பதிவெண் ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.