தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘ராயன்’. இன்று இது ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் தனுஷுக்கு நடிகர் கார்த்தி தனது ‘X’ தளத்தின் மூலம் வாழ்த்து கூறியுள்ளார். உங்களின் 50வது படத்திற்கு வாழ்த்துகள். அயராத உழைப்புக்கும், சினிமா மீதான ஆர்வத்திற்கும் ‘ராயன்’ படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள். ராயன் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவைப் பார்த்த நடிகர் தனுஷ், நன்றி தெரிவித்துள்ளார்.