பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர் (xbox controller) ஆர்டர் செய்திருந்தார். அதன்படி வந்த பார்சலை அவர் பிரித்துப் பார்த்தபோது, அதன் உள்ளே உயிருள்ள பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை அறிந்த அமேசான் அசவுகரியத்திற்கு மன்னிப்பு கோரித்துடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. ஆனால் நெட்டிசன்களோ அமேசான் தற்போது பாம்பு டெலிவரி செய்கிறதா? என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.