சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு இன்று காலை புறப்பட்டது. அங்கு, ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த அணிக்கு விவிஎஸ்.லக்ஷ்மன் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க இளம் வீரர்களை நம்பி களம் இறங்கும் அணி, வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வீரர்கள் : சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ருதுராஜ், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரேல், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அஹமது, முகேஷ் குமார், தேஷ்பாண்டே.