இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், முதல் 2 போட்டிகளில் சஞ்சு சாம்சன், சிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் ஷர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான 1வது மற்றும் 2வது டி20 போட்டிக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், துருவ் ஜூரல் (WK), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (WK), ஹர்ஷித் ராணா