கர்நாடகாவில் போன் பே-க்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில், கர்நாடகாவில் தனியார் வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை மாநில அரசு அறிவித்துப் பின் வாங்கியது. ஆனால் PhonePe இன் நிறுவனர் சமீர் நிகம், தனியார் துறையில் உள்ளூர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் கன்னட மக்கள் போன் பே புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் அந்நிறுவனத்திற்கு எதிராக பதிவுகள் பகிரப்படுகிறது.