தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் அக்டோபர் இரண்டாம் தேதி புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஜன் சூரஜ் என்ற அமைப்பை நடத்தி வரும் அவர், காந்தி ஜெயந்தி அன்று அதனை கட்சியாக மாற்றி பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். முன்னதாக இவர் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார். கட்சி தொடங்கிய பிறகு அந்த பணியை அவர் கைவிடப் போவதாகவும் தெரிகிறது.