தூத்துக்குடி தருவை மைதானத்தில் இந்திய ராணுவத்திற்கு அக்னி பாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உடல் தகுதி தேர்வு, 1600 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றவை நடைபெற்றன. இந்த தேர்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.