மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11,34,000 பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 489 நிவாரண முகாம்களில் சுமார் மூன்று லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா ஆற்றின் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரல்வதால் அசாம் மக்கள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.