சென்னையில் சாலையில் காகிதம் சேகரித்து பிழைக்கும் திருச்சியை சேர்ந்த ராஜா என்பவருக்கு கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் வேலை வாங்கி கொடுத்துள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அமைச்சர் நடை பயிற்சி செய்து கொண்டிருந்த பொழுது ராஜாவை சந்தித்துள்ளார்.
அவரிடம் விசாரித்த பொழுது அவர் ஆதரவற்ற நிலையில் இருப்பதை உணர்ந்து தன்னுடைய வாகனத்தில் ஏற்றி சென்று குளிக்க சொல்லி உணவு உடை கொடுத்து மருத்துவ பரிசோதனைகளையும் செய்துள்ளார். அதன் பிறகு கிண்டி மருத்துவமனையில் வேலையும் வாங்கி கொடுத்துள்ளார்.