அடல் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளுக்கான குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சேமிப்புத் தொகையின் அடிப்படையில் மத்திய அரசு ₹1000 – ₹5000 வரை ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இதை இரட்டிப்பாக (₹10000 வரை) உயர்த்தி வழங்க இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.