தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து, ஜூலை 21ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார். 19ஆம் தேதி பாமக, 22ஆம் தேதி அமமுக, 23ஆம் அதிமுக, 25ஆம் தேதி தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூ., என அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. இது திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது.