தமிழகத்தில் 2 மாநகராட்சி மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் மேயராக உள்ள கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் வழங்கியுள்ளார். அவரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தற்போது ராஜினாமா செய்துள்ளார். முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.