தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களது அமைச்சரவையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக, மாண்புமிகு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் அண்ணன் திரு. எல். முருகன் அவர்கள், பதவியேற்ற பிறகு முதன்முறையாக கமலாலயம் வருகை தந்திருந்தார். அவருக்கு பாஜக தமிழ்நாடு சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது இனிய பண்புகளாலும், அயராத செயல்பாடுகளாலும் அரும்பணிகள் ஆற்றி வரும் அண்ணன் திரு. எல். முருகன் அவர்கள், மத்திய இணையமைச்சராக தனது சிறந்த மேலான செயல்பாடுகளைத் தொடர வாழ்த்தி மகிழ்கிறோம்” என தெரிவித்துள்ளார்.