அல்வாவை வைத்தும் ராகுல் காந்தி அரசியல் செய்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகி அமர் பிரசாந்த் ரெட்டி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மண்டல கமிஷன் குறித்து எதுவுமே தெரியாமல் ராகுல் மக்களவையில் பேசி வருவதாக விமர்சித்தார். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது தனக்கு அண்ணாமலை அல்வா கொடுத்ததாக தெரிவித்த அவர், அது ராகுல் கூறும் இந்த அல்வா அல்லா என்றும் குறிப்பிட்டார்.