எதற்கும் ரியாக்சன் செய்ய முடியாத நிலையில், 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். இதனால் அரசியலில் இருக்கணுமா? என்ற எண்ணம் மனதில் இருந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு, மறைமுகமாக அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஏற்கெனவே, அவரின் தலைவர் பதவி பறிக்கப்படும் என கடந்த சில மாதங்களாகவே பேச்சு அடிபடும் நிலையில், இவ்வாறு கூறியுள்ளார்.