வழக்கு எனக் கூறி, எல்லோரையும் மிரட்டுவது போல தம்மை மிரட்ட முடியாது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், அண்ணாமலையைப் போல கோழை யாரும் இருக்க முடியாது. தாம் எல்லா வழக்குகளையும் சந்தித்துள்ளதாகவும், மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் என்றும் தெரிவித்துள்ளார். தமது வழக்கின் தன்மை அண்ணாமலைக்கு தெரியாது என்றும், தம் மீதான வழக்கை காவல்துறைதான் வாபஸ் பெற்றதென்றும் கூறியுள்ளார்.