மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்வியை சுட்டிக்காட்டி தனது தலைமையில் செயல்பட முன் வரும்படி சசிகலா அழைப்பு விடுத்திருந்தார். தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்தும் பேசியுள்ளார். ஆனால் தேர்தலில் வெளியே எட்டிக் கூட பார்க்காத சசிகலா எப்படி அதிமுகவுக்கு தலைமை வகிப்பார் எப்படி ஒருங்கிணைப்பார் எனக் கூறி அவரது அழைப்பை நிர்வாகிகள் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக 39 தொகுதிகளை கைப்பற்றியது. அதே நேரத்தில் அதிமுக ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாமல் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.