கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக் கோரி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதிலும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட நிலையில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் சென்று ஆதரவு வழங்கினார். அதிமுக உடன் இணைந்து அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.