முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த நிலையில், ஓபிஎஸ் அணியில் வெல்லமண்டி நடராஜன் செயல்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக ஓபிஎஸ் மீது அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இபிஎஸ் முன்னிலையில் தாய் கட்சியான அதிமுகவில் விரைவில் இணைவார் என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன