தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “அந்தகன்” திரைப்படத்தின் ‘அந்தகன் ஆந்தம்’ என்ற முதல் பாடலை விஜய் வெளியிட்டுள்ளார். ஒருவகையான மோட்டிவேஷன் பாடலாக எளிமையான வரிகளால் உருவாகியுள்ளது. சில இடங்களில் மெட்டைத் தாண்டி வரிகள் போன்ற உணர்வு எழுகிறது. அனிருத் குரலுக்கு ஏற்ப பிரசாந்தின் நடனமும் கவனத்தை ஈர்க்கிறது. இப்படம் ஆக.15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.