தனது பந்துவீச்சு சிறப்பாக அமைய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆலோசனை உதவிகரமாக இருந்ததாக ரியான் ஃபராக் தெரிவித்துள்ளார். வலைப்பயிற்சியில் பந்துவீச்சு குறித்து கம்பீர் ஆலோசனை வழங்கியதாக தெரிவித்த அவர், மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் போது தயங்காமல் பந்து வீசுமாறு வழிகாட்டியதாக கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் 10 பந்துகளில் 3 விக்கெட்டை அவர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.