காஷ்மீரில் உள்ள அமர்நாத் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. இந்த சமயத்தில் அமர்நாத் சிவலிங்கத்தை தரிசிக்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை இந்த வருடம் வருகின்ற ஜூன் 29 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடையும். பனி படர்ந்த சிவலிங்க குகையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத்திற்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.