அமெரிக்காவின் ‘டைம்ஸ் ஸ்கொயர்’ பகுதியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் சிலை திறக்கப்பட்டது. பல ஆண்டுகளாக Duroflex மெத்தை நிறுவனத்தின் விளம்பரதாரராக இருக்கும் கோலியை கௌரவிப்பதற்காக அந்நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் அவரது பெருமைக்கு இந்த சிலையை Duroflex சமர்ப்பணம் செய்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.