தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது வழக்கு விசாரணையை இம்மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.