விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கவுதம் சிகாமணியை நியமித்தது திமுக. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆக இருந்த புகழேந்தி அண்மையில் காலமான நிலையில் கௌதம சிகாமணி நியமனம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
சிறுபான்மை நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். அவரை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து ப. சேகரை திமுக தலைமை நியமித்துள்ளது. இதற்கான காரணத்தை திமுக மேலிடம் தெரிவிக்காத நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் போதிய தீவிரம் காட்டாதது மூத்த அமைச்சர் பொன்முடியுடனான மோதல் அதிகரித்ததே பின்னணியாக கூறப்படுகிறது.