முகேஷ் அம்பானி இல்லத் திருமண நிகழ்ச்சியில் மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா பங்கேற்றிருந்தார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், அம்பானி குடும்பத்தினரின் அரவணைப்புக்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி மறக்கமுடியாத அனுபவத்தை தந்ததாகவும், தன் வாழ்க்கையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்திய ஷாருக் கானை சந்திக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.