சென்னையில் அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வுவை அறிவித்து சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலமாக சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.3.07 கோடி கூடுதல் செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி உயர்த்தி வழங்கப்படுகிறது.