ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், எஸ்எம்சி குழு குறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டத்தை ஜூலை 28ஆம் தேதி நடத்த வேண்டும். இதற்கு ஜூலை 26-ம் தேதிக்குள் அழைப்பு விடுக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 3ம் தேதியும், தொடக்கப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 10 , 17 ஆகிய தேதிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 24ம் தேதியிலும் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.