திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே அரசுப் பேருந்தில் பயணிக்க ₹50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக ₹56 வசூலிக்கப்படுவதால் நடத்துநர்கள், பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதிகாரிகள் சொல்வதைதான் தாங்கள் செய்வதாக நடத்துநர்கள் கூறுகின்றனர். Point-to-Point பேருந்துகளில்தான் ₹56 வசூலிக்கப்படுவதாக பணிமனை அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர்.