ஆந்திரா, பிஹார் தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். பட்ஜெட்டில் பிஹாருக்கு ரூ.26,000 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடியும் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆந்திரா, பிஹாருக்கான பட்ஜெட் வெளியானதானவும், மற்ற மாநிலங்கள் அல்வா சாப்பிடும் படியும் கிண்டல் செய்துள்ளார்.