ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலத்தில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டுமல்லி நேற்று 500 முதல் 550 ரூபாய் வரை விற்கப்பட்டது. 150 ரூபாய்க்கு விற்ற முல்லை 200 ரூபாய்க்கும் ஜாதிமல்லி 500 ரூபாய்க்கும். காக்கட்டான், மலைக்காட்டான் 160 ரூபாய்க்கும், செவ்வரளி, நந்தியாவட்டம் மற்றும் சாதா சம்பங்கி ஆகியவை 100 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி ஆகியவை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.