ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி பாசனம் பெறும் மாவட்ட மக்கள் கொண்டாடும் விதமாக ஜூலை 28 முதல் 7 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆகஸ்ட் 3 ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.. அன்றைய தினம் காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவார்கள் என்பதால் ஜூலை 28 முதல் ஏழு நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.