பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ஆடு ஜீவிதம்’. இது 2008ல் மலையாளத்தில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவானது. இந்நிலையில், இப்படம் ஜூலை 19 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.