உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பயங்கர சாலை விபத்து நடந்தது. டிராக்டர் டிராலியை முந்திச் செல்ல முயன்ற ஆட்டோ ரிக்ஷா மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை கண்டு பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.