நாகரீக கலாச்சாரங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி என ஒரு பக்கம் இருந்தாலும் ஆணவக் கொலைகளும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதை சாதி அடிப்படையிலானது என்ற விதத்தில் மட்டும் பார்ப்பது போதாது, பெண்ணுக்கு எதிரான குற்றமாகவும் உள்ளன. குடும்பத்தாரால் தனது வாழ்க்கை துணையை பெண் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. ஒரு ஆணவக் குற்றத்துக்கு சாதி மட்டுமே காரணம் கிடையாது. பாலினம், வர்க்கம், கலாசார வழக்கம் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.