ஆதார் உடன் சேர்க்கப்பட்ட மொபைல் எண் கையில் இருப்பது அவசியமாகும். ஒருவேளை பயன்பாட்டில் அந்த எண் இல்லை என்றால் புதிய எண்ணை எளிதில் அப்டேட் செய்யலாம். அருகிலுள்ள ஆதார் சேவை மையம் மற்றும் இ சேவை மையத்திற்கு சென்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயோமெட்ரிக் பதிவிட்டால் புதிய மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும். இதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும். பயோமெட்ரிக் பதிவிடுவதால் எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை.