2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் 9 அம்சங்களை முன்னிறுத்தி தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி விவசாய உற்பத்தித்திறன் *வேலைவாய்ப்பு மற்றும் திறன் *மேம்பட்ட மனித வளம், சமூக நீதி *உற்பத்தி மற்றும் சேவைகள் *நகர்ப்புற வளர்ச்சி *ஆற்றல் பாதுகாப்பு உள்கட்டமைப்பு *புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு *அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்.
பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையி நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பிஹார், ஜார்க்கண்ட், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும் வகையில் ‘பூர்வோதயா திட்டம்’ அமல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், ஆந்திராவின் மூலதன தேவையை உணர்ந்து, அரசு ஆதரவு வழங்கும் என்றார். மூலதன மேம்பாட்டிற்காக ஆந்திராவுக்கு ₹15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.