சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் விடுமுறை நாட்களில் மக்கள் அதிக அளவு பயணிக்கின்றனர். இது போன்ற நேரங்களில் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டண கொள்ளையில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. அரசின் எச்சரிக்கைகளையும் மீறி இது போன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனை தடுத்து ஆண்மை பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் பல தரப்பினரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.